சனி, 20 ஜனவரி, 2018

கந்துவட்டி கும்பலுக்கு காவல்துறை உடந்தை! நெல்லை மாவட்ட நிர்வாகம் அலட்சியம்!! மூவேந்தர் புலிப்படை கடும் கண்டனம்!

நெல்லை மாவட்டம், காசிதர்மத்தைச் சார்ந்த இசக்கிமுத்து என்பவரின் குடும்பம் நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே பதற வைத்துள்ளது.

இதில் இசக்கிமுத்துவின் ம
னைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு பலியாகியுள்ளனர். இசக்கிமுத்து கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டுள்ளார்.

இந்த கொடூர நிகழ்வு குறித்து மூவேந்தர் புலிப்படை ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.
ரூ. 1,45,000/- கடன் வாங்கியதற்கு எட்டு மாத காலத்தில் ரூ. 2,34,000 கொடுத்த பின்பும் கடன் கொடுத்தவர் தொடர்ச்சியாக மிரட்டியிருக்கிறார். அச்சன்புதூர் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்த பிறகும் காவல்துறை உருப்படியான எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாலும், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தும் மிரட்டல் நிற்காததால் குடும்பமே தீக்குளித்து பச்சிளங்குழந்தைகள் உட்பட துடிதுடித்து இறந்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைகண்காணிப்பாளர், காவல்நிலைய அதிகாரிகள் அனைவரிடமும் புகார் செய்த பிறகும் காவல்துறை கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக இருந்ததன் காரணமாகவே இந்த கொடூரமான மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இவர்களது மரணத்திற்கு இவர்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நாள்தோறும் கந்துவட்டியால் சாமானிய மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மாவட்ட நிர்வாகம், காவல்நிலையங்கள் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவான நிலை எடுப்பதே இந்த மரணங்களுக்கு காரணம். இந்த மரணங்களை கொலை என்றே கொள்ள வேண்டும்.

இந்த குடும்பத்தின் தற்கொலைக்கு காரணமான வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், உரிய முறையில் புகார் செய்த பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அச்சன்புதூர் காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கந்துவட்டிக்காரர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் மூலம் கந்துவட்டியை ஒழிக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும்,
2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கந்துவட்டி ஒழிப்புச் சட்டம் கடந்த 14 ஆண்டு காலமாக எவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்து சட்டத்தை கறாராக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும்
மூவேந்தர் புலிப்படை தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

மூவேந்தர் புலிப்படையின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

புதிதாக பொறுப்பேற்றுள்ள பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

டாக்டர்.அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மூவேந்தர் புலிப்படை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

டிசம்பர்/6/2017 டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மூவேந்தர் புலிப்படை சார்பில் பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வழக்கறிஞர் செ.பாஸ்கர் தலைமை ஒருங்கிணைப்பாளர், மு.கா.வையவன் தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தலைமையில் ஒத்தக்கடை ரவி, புறநகர் மாவட்ட துணை செயலாளர் திருவேடகம் சரவணன், மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக், பெருமாள்பட்டி தியாகு, வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் கன்னுடையாள்புரம் குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஒத்தக்கடை கருப்புசாமி, கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சோழன்பதி முத்துக்குமார், பெருமாள்பட்டி ஜெயப்பிகாசு, பரவை பேரூராட்சி பொருளாளர் புகழேந்திரன், பரவை பேரூராட்சி இளைஞரணி சாம்சரன், கோபி, சிலையனேரி சரவணன், கார்த்திக், பாசிங்காபுரம் அஜித், ஒத்தக்கடை பாட்சா, கடச்சனேந்தல் முனீஸ், வினோத், செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வெள்ளி, 19 ஜனவரி, 2018

மதுரை புறநகர் மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டியில் மூவேந்தர் புலிப்படையின் புதிய கிளை துவக்கம்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டியில் மூவேந்தர் புலிப்படையின் புதிய கிளை கடந்த ஞாயிற்று கிழமை மாலை ஆறு மணி அளவில் உருவாக்கப் பட்டது. இக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செ.பாஸ்கர், தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் மு.கா.வையவன், புறநகர் மாவட்ட பொறுப்பாளர் ஒத்தக்கடை ரவி, அலங்கை ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டியன், வாடிப்பட்டி ஒன்றிய இளைஞரணி செயலாளர் மணிகண்டன், புறநகர் மாவட்ட இளைஞரணி பொருப்பாளர் தியாகு, கிழக்கு ஒன்றிய இளைஞரணி பொருப்பாளர் ஜெயப்பிரகாசு, பொம்மிநாயக்கன்பட்டி உறவின்முறை தலைவர் ரவி, ஊர்க்குடும்பன் மலர்மன்னன், காலாடி செல்வம், பழனி உள்ளிட்ட 40 பேர் கலந்துகொண்டனர். புதிய பொருப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.