வியாழன், 30 ஆகஸ்ட், 2018

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு

மூவேந்தர் புலிப்படை உட்பட 22 கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அங்கம் வகிக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கத்தின் சார்பில் பல்வேறு கேரிக்கைகளை விளக்கி இன்று 30.08.2018 வியாழக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் மதுரை, மாட்டுத்தாவணி எதிரில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் சேகரனார் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்துள்ள விதிமுறைகள்!

சிவகங்கை மாவட்டம் தேவேந்திரகுல மக்கள் சபையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் இம்மானுவேல் சேகரனார் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கறிஞர்கள் பெருமதிப்பிற்குறிய விஜேந்திரன் (சென்னை), அன்பரசு(மதுரை) ஆகியோர் ஆஜராகி வாதாடினர். 24.08.2018 வெள்ளிக்கிழமை விசாரணை முடிவடைந்து நேற்று 27.08.2018 திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

தமிழக அரசே! காவல்துறையே! இம்மானுவேல் சேகரனாரின் குருபூசையை ஒழுங்குபடுத்தும் முயற்சியா? ஒழித்துக்கட்டும் முயற்சியா?

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் அடக்குமுறையும்! பெருகும் மக்கள் கூட்டமும்!
---------------------------------------------------------------------------------------
தமிழக அரசே! காவல்துறையே!
இம்மானுவேல் சேகரனாரின் குருபூசையை ஒழுங்குபடுத்தும் முயற்சியா? ஒழித்துக்கட்டும் முயற்சியா?
===========================================
எதிர்வரும் செப் - 11 மாவீரர் இமானுவேல் சேகரனார் அவர்களின் வீரவணக்க நாளில் வழக்கமாக அஞ்சலி செலுத்த வரும் வழித்தடத்தை அனுமதிக்காமல் புதிய வழித்தடத்தை உருவாக்கி அந்த வழித்தடத்தில் தான் வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் முடிவெடுத்து, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமமாக காவல் துறையை அனுப்பி குழப்பம் ஏற்படுத்துவது ஏன்?

இந்த செய்தியறிந்து நேற்று திங்கட்கிழமை 20.8.2008 மூவேந்தர் புலிப்படை, மள்ளர் நாடு, மக்கள் மறுமலர்ச்சி கழகம், தேவேந்திரர் இளைஞர் பேரவை, மருதம் மக்கள் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து கடந்த ஆண்டுகளில் வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழித்தடத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அவ்வாறு அனுமதிக்காவிட்டால் தேவேந்திரகுல மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆண்டுதோறும் செப்-11 முன்னதாக கூட்டப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினோம். ஆனால் மாவட்ட ஆட்சியர் சட்டம் & ஒழுங்கு குறித்து நான் முடிவெடுக்க முடியாது என்று கை விரிக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து கட்சி & இயக்கங்களின் கூட்டம் கூட்டுவது குறித்து யோசிக்கிறோம் என்கிறார். நாட்கள் கடந்து விட்டது. குறுகிய நாட்களே உள்ளன. இனியும் நாம் காலம் தாழ்த்த முடியாது என்ற காரணத்தால், மேற்படி சந்திப்புக்கு பிறகு மேற்குறிப்பிட்ட இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனடியாகக் கூடி ஆலோசனை நடத்தினோம்,

இக்கூட்டத்தில் மூவேந்தர் புலிப்படையின் சார்பில் நானும் (மு.கா.வையவன், தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் ), மாநில அமைப்புச் செயலாளர் ஸ்டாலின், சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் நிகரன், கடலாடி ஒன்றிய செயலாளர் மாரந்தை இரா.கோபி, இராமநாதபுரம் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் நந்தகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டோம்.

வழக்கமான வழித்தடத்தில் வீர வணக்கம் செலுத்த அனுமதிக்கக் கோரியும், சொந்த வாகனமில்லாத ஏழை, எளிய, பாமர மக்களும் வந்து வீர வணக்கம் செலுத்துவதற்கு ஏதுவாக தமிழகத்தின் அனைத்து போக்குவரத்து கழகங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க வலியுறுத்தியும் வருகின்ற 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பரமக்குடி பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி எழுத்துப் பூர்வமான மனுவை தேவேந்திரர் இயக்கங்களின் கூட்டியக்கம் என்ற பேரில் போராட்டம் நடத்துவது என முடிவெடுத்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அவர்களிடம் அனுமதி கடிதத்தை கொடுத்தோம். ஆய்வாளர் அவர்கள் அனுமதி சம்மந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசியில் பேசினார். மேலிடத்தில் கலந்து சொல்வதாக தெரிவித்தார். இந்நிலையில் அனுமதி கொடுத்தால் போராட்டம் நடந்துவது. அனுமதி மறுக்கப்பட்டால் நாம் ஆண்டாண்டு காலம் சென்று வரும் வழித்தடத்தில் சென்று வர சட்ட & மக்கள் போராட்டத்தின் மூலம் வென்றெடுக்க முடிவு செய்து மாவீரன் துயில் கொல்லும் மண்ணை விட்டு புறப்பட்டோம்.

தேவேந்திரகுல சொந்தங்களே இது வழித்தடத்தை மாற்றும் முயற்சி அல்ல. நமது அரசியல் எழுச்சியை தடுக்கும் அரசின் நவீன அடக்கு முறை என்பதை உலக தேவேந்திரர்களுக்கு உரக்கச் சொல்வோம்.
============================================
தலைமைச் செயலகம்,
மூவேந்தர் புலிப்படை.
============================================
பேச: 9842380072, வாட்ஸ் அப்: 9080003047.
============================================
Facebook page லின்க்:
https://www.facebook.com/pg/mukavaiavan/about/
============================================
twitter லின்க்:
https://twitter.com/Vaiavan1/status/935974703482789889
============================================
You tube (மூவேந்தர் மீடியா) லின்க்: https://youtu.be/addme/1-iGVOoq42eRvzz8ZCgAFCaDOkxQzA
============================================
இணையம்:
moovendharpulippadai.blogspot.com
moovendharpulippadai.wordpress.com
============================================